ஜார்ஜ்டவுன், ஜூலை.07-
பினாங்கு, ஜாலான் கெபுன் ஞோரில் வீற்றிருக்கும் பழமை வாய்ந்த ஓம் ஸ்ரீ மகா மதுரை வீர சுடலை மாடசாமி கோயிலின் 10வது ஆண்டு உற்சவத் திருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆலயத்தின் சிறப்பையும், வலிமையையும் காட்டுகிறது என்று இவ்வாலயத்தின் பக்தரான டாக்டர் ஆர். சிவபிரகாஷ் தெரிவித்தார்.
இந்த வருடாந்திர வைபவம், திருவிழா உற்சவம் மட்டுமல்ல, தனித்துவமான பாரம்பரியம், பினாங்கைத் தளமாகக் கொண்ட அன்பார்ந்த விவிஎஸ் சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்து, சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டது மனநிறைவைத் தந்தததாக டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்தார்.