மலாக்கா, ஜூலை.07-
மக்கள் நடமாட்டம் நிறைந்த பொது இடத்தில் பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு, திருநங்கையைப் போல் பாவனை செய்த குற்றத்திற்காக கொன்டென்ட் கிரியேட்டர் ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ ஷரியா நீதிமன்றம் 1,800 ரிங்கிட் அபராதம் விதித்தது.
25 வயது முகமட் ஹாக்கிம் நொராஜி என்ற அந்த கொன்டென்ட் கிரியேட்டர், தனக்கு எதிரான இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அமிருடின் இத்தீர்ப்பை வழங்கினார்.
கடந்த ஜுன் 10ஆம் தேதி மலாக்கா, பண்டார் ஹிலிரில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.