கோலாலம்பூர், ஜூலை.07-
மாந்தீரிகச் சடங்கைக் கையாளும் சூனியக்காரி என்று தம்மை முத்திரைக் குத்தி, டிக் டோக்கில் பேசிய நபருக்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் தொடுத்த மானநஷ்ட வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை இழப்பீடு குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.
நாளை வீடியோ அமர்வின் நீதிபதி டத்தோ அஹ்மாட் ஷாஹிர் முகமட் சால்லே தீர்ப்பளிக்கவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர் ரோஸ்மாவிற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது.