சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 99 ஆக அதிகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது

கூச்சிங், ஜூலை.07-

சரவாக் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 82 லிருந்து 99 ஆக அதிகரிப்பதற்கு இன்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆளும் மாநில அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகக் கடைசியாகக் கடந்த 2015 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. அதன் எண்ணிக்கை 82 ஆக உயர்த்தப்பட்டது.

சரவாக் மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்து வரும் மக்கள் அடர்த்தியைக் கருத்தில் கொண்டு புதிய தொகுதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

WATCH OUR LATEST NEWS