இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு முன்னுதாரண மாநிலம் கிளந்தான்

கோத்தா பாரு, ஜூலை.08-

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் ஒரு முன்னுதாரண மாநிலமாகக் கிளந்தான் விளங்கி வருகிறது என்று அதன் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசுருடின் டாவுட் தெரிவித்துள்ளார்.

கிளந்தான் மாநிலம், அதன் வரலாற்றில் எந்தக் காலக் கட்டத்திலும் இனங்களுக்கு இடையிலான கலவரத்தைச் சந்தித்தது இல்லை. இது நாட்டின் உண்மையான ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாகும் என்று மந்திரி பெசார் புகழாரம் சூட்டினார்.

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையை கிளந்தான் மாநிலம், வெறும் விழாக் காலங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டதில்லை. மாறாக, இந்த மாநிலத்தில் எல்லா பருவக் காலங்களிலும் ஒற்றுமையின் வசந்தமே நீடிக்கும். அந்த அளவிற்கு இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையைப் பாஸ் கட்சி தலைமையிலான கிளந்தான் கட்டிக் காத்து வருவதாக மந்திரி பெசார் நசுருடின் டாவுட் தெரிவித்தார்.

இன மோதல்கள் இல்லாத ஒரு மாநிலமாக கிளந்தானுக்கு அருளப்பட்ட இந்த ஆசி, இறைவனின் கிருபையால் கிட்டியதாகும் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

WATCH OUR LATEST NEWS