ஆடவர் அடித்துக் கொலை: தந்தையும் மகனும் கைது

கோலாலம்பூர், ஜூலை.08-

ஆடவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபரையும், அவரின் 36 வயது மகனையும் அம்பாங் ஜெயா போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுன் 22 ஆம் தேதி கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் மருத்துவர் அளித்த புகாரைத் தொடர்ந்து தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அண்மையில் அம்பாங், தாமான் பண்டான் பெர்டானாவில் நபர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தைப் போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியிருந்தது.

எனினும் அந்த நபரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில், அந்த நபர் பிரம்பினால் அடிக்கப்பட்டதுடன், பிளாயர் கொண்டு அவரின் உடல் உறுப்பு திருவப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக முகமட் அஸாம் குறிப்பிட்டார்.

கடன் விவகாரத்தினால் அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS