மலேசியா மீதான இறக்குமதி வரி 25 விழுக்காடாகும்

கோலாலம்பூர், ஜூலை.08-

மலேசியா மீதான இறக்குமதி வரி 25 விழுக்காடாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது குறித்து ஓர் கடிதம் வாயிலாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மலேசியா மீதான 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. பல நாடுகளின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து அமெரிக்க உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று டிரம்ப் அந்த கடிதத்தில் விளக்கியுள்ளார்.

மற்ற நாடுகள் அமெரிக்காவைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இனி அனுமதியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 சதவீத வரிகளை எதிர்கொள்ளும் நாடுகளில் ஜப்பான், தென் கொரியா, துனிசியா, கஜகஸ்தான் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா, போஸ்னியா ஆகிய நாடுகளுக்கு 30 விழுக்காடு வரியும், செர்பியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு 35 விழுக்காடு வரியும், கம்போடியா, தாய்லாந்து முதலிய நாடுகளுக்கு 36 முதல் 40 விழுக்காடு வரை வரியும், ஏனைய நாடுகளுக்கு இதை விடக் கூடுதல் வரியையும் டிரம்ப் நிர்ணயித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS