ஜோகூர் பாரு, ஜூலை.08-
கடந்த ஆண்டு போலீஸ்காரருக்கு 100 ரிங்கிட் கையூட்டு கொடுத்ததாக லோரி ஓட்டுநர் ஒருவர், ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
35 வயது பி. சத்தியசேகர் என்ற அந்த லோரி ஓட்டுநர், நீதிபதி டத்தோ அஹ்மாட் கமால் அரிஃபின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2024 ஆம்ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மதியம் 12.45 மணியளவில் செகமாட்டில் கம்போங் பாக்கி, ஜாலான் பாகோவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக சத்தியசேகருக்கு எதிரானக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து சத்தியசேகர் விசாரணை கோரியதால், அவரை 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.