நிறுவனத்தின் உதவி இயக்குநர் மீது மோசடி குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை.08-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 51 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள கையுறை விநியோக வர்த்தகத்தில் மோசடி புரிந்ததாக நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

36 வயது பி. டினேஸ் என்ற அந்த உதவி இயக்குநர், நீதிபதி அஸ்ருல் டாருஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அஸ்பென் பிரோட்வே சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனத்தின் மற்றோர் இயக்குநருடன் கூட்டாகச் சேர்ந்து டினேஸ் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இல்லாத கையுறை வர்த்தகத்தை இருப்பதைப் போல் காட்டி நம்ப வைத்து இந்த மோசடியை டினேஸ் புரிந்துள்ளதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் துன் இஸ்மாயிலில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 சிறை, அபராதம் மற்றம் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் டினேஸ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS