ரெப்பா தொகுதியில் காசே மடானி திட்டம்

சிரம்பான், ஜூலை.08-

கடந்த ஜுலை 5 ஆம் தேதி காலையில் நெகிரி செம்பிலான், இந்தியர் சமூக இயக்கம், ரெப்பா சட்டமன்றத் தொகுதியின் சேவை மையம் மற்றும் தம்பின் சமய விவகார இலாகாவின் ஏற்பாட்டில் அரேனா மண்டபத்தில் காசே மடானி திட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு நெகிரி செம்பிலான் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வீரப்பன் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சுமார் 150 பேர் கலந்து சிறப்பித்தனர்.

நெகிரி செம்பிலான் மாநில சமய இலாகாவின் ஹலால் சான்றிதழ் விளக்கமளிப்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்வில் எஃப் & என் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் மாநில நிதி அலுவலகத்தின் N9 Pay-யின் தகவல்கள், வந்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்டது.

தவிர சிறார்களுக்கு வர்ணம் தீட்டுதல், பலூன் போட்டிகள் மற்றும் மகளிருக்கான கோலமிடுதல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

வேலை தேடி வரும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு எஃப் & என் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெறுதல் என்பது தொடர்பான விளக்கமளிப்புடன் அதிர்ஷ்டக் குலுக்குப் போட்டியும் நடத்தப்பட்டது.

பின்னர் ஏற்பாட்டுக் குழுவினருடன் இணைந்து வீரப்பன், தமது சொந்த தொகுதியான ரெப்பாவில் வசதி குறைந்த 5 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை எஃப் & என் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினருக்கும் வீரப்பன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS