கோலாலம்பூர், ஜூலை.08-
இந்தோனேசியாவின் புதிய தலைநகரம், வட காலிமந்தானுக்கு இடம் மாற்றப்படும் பரிந்துரையைத் தொடர்ந்து காலிமந்தான், சபா, சரவா ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் 10 க்கும் மேற்பட்ட புதிய எல்லைப் பகுதிகளைத் திறப்பதற்கு மலேசியாவும் இந்தோனேசியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்த பத்துக்கும் மேற்பட்ட புதிய எல்லைப் பகுதிகளைத் திறப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய எல்லைப் பகுதிகளைத் திறப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 100 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூரில் ”நாட்டின் பாதுகாப்பு நமது கூட்டுப் பொறுப்பாகும்” எனும் கருப்பொருளில் அமைச்சர்களுக்கான இந்தான் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.