பகாங் சுல்தான் படத்தைப் பயன்படுத்துவதா? போலீசார் விசாரணை

பெக்கான், ஜூலை.08-

மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லாவின் முகத் தோற்றத்தைப் பயன்படுத்தி, ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் வீடியோ படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, பகிரப்பட்டு வருவது தொடர்பில் போலீசார் புகார் பெற்றுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

உரிய நடவடிக்கைக்காக இந்தப் புகார், தற்போது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சிக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

1998 ஆம் ஆண்டு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நபர், போலி கணக்கைக் கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டத்தோ ஶ்ரீ யஹாயா தெரிவித்தார்.

அந்த வீடியோவின் உள்ளடக்கம் உண்மையானது அல்ல என்பது குறித்து பகாங் அரண்மனையும் போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS