சீனா-நேப்பாள எல்லையில் மண் சரிவு: 17 பேரைக் காணவில்லை

பெய்ஜிங், ஜூலை.08-

சீனா-நேப்பாள எல்லையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 17 மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சீனா-நேப்பாள எல்லைப் பகுதியில் கைரோங் என்ற நகரம் உள்ளது. கைரோங் என்ற பகுதி தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியாகும். இங்கு இன்று அதிகாலையில் கனமழை பெய்தது. அதனை அடுத்து ஏற்பட்ட மண்சரிவில் 17 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த 11 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த 6 கட்டுமானத் தொழிலாளர்களும் மாயமாகி உள்ளனர். காணாமல் போனவர்கள் சேற்றில் சிக்கி இருக்கலாம் என ஐயுறப்படுகிறது. எனவே அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS