காருடன் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி பலி

மாச்சாங், ஜூலை.08-

சாலைச் சந்திப்பிலிருந்து வெளியேறிய காருடன் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் ஜாலான் கோத்தா பாரு- கோல கிராய் சாலையின் 35.8 ஆவது கிலோமீட்டரில் மாச்சாங்கில் நிகழ்ந்தது.

கடுமையானக் காயங்களுக்கு ஆளாகிய அந்த மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஷாஃபிகி ஹுசேன் தெரிவித்தார்.

பெரோடுவா மைவி காரைச் செலுத்திய மாது, எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS