கோலாலம்பூர், ஜூலை.08-
பேருந்து முந்திச் செல்வதற்கு வழிவிடாமல் இடையூறு விளைவித்ததாக நம்பப்படும் சைக்கிளோட்டிகளை உள்ளடக்கிய கும்பல் ஒன்றைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணியளவில் ஜாலான் கோல சிலாங்கூர் – கோலாலம்பூர் சாலையின் 23 ஆவது கிலோமீட்டரில் சுங்கை பூலோவை நோக்கிச் செல்லும் வழித் தடத்தில் அந்த சைக்கிளோட்டிகள், பேருந்துக்கு இடையூறு விளைவித்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சைக்கிளோட்டிகளைப் போலீசார் அடையாளம் கண்டு வரும் அதே வேளையில் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.