மாதுவின் பிட்டத்தைத் தட்டிய ஆடவருக்கு 100 ரிங்கிட் அபராதம்

கிள்ளான், ஜூலை.08-

கடந்த சனிக்கிழமை கிள்ளான், பண்டமாரானில் காலைச் சந்தையில் மாது ஒருவரின் பிட்டத்தைத் தட்டி, மானபங்கம் புரிந்த ஆடவர் ஒருவருக்கு கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 ரிங்கிட் அபராதம் விதித்தது.

அடையாளம் தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒழுங்கீனச் செயல் குறித்து சந்தையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்களிடம் மாது புகார் அளித்தார். உள்ளூரைச் சேர்ந்த 36 வயது நபர், அவ்விடத்திலேயே கைது செய்யப்பட்டு பண்டமாரான் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.

அந்த நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS