இஸ்கண்டார் புத்ரி, ஜூலை.08-
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் கார் ஒன்றை எட்டி உதைத்து, அதன் ஓட்டுநரை நோக்கி ஆபாச சைகையைக் காட்டிய நபரைப் போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கெலாங் பாத்தாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியைப் போலீசார் அடையாளம் கண்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. எம். குமரேசன் தெரிவித்தார்.
இரவு 8.37 மணியளவில் ஆடவர் ஒருவர் தனது காரை எட்டி உதைத்து ஆவேசமாக நடந்து கொண்டார் என்று 24 வயது நபரிடமிருந்து போலீஸ் புகாரும் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினமே அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக குமரேசன் தெரிவித்தார்.