மலாக்கா, ஜூலை.08-
மலாக்கா நதியின் இரண்டாம் கட்டப் பகுதியில் மீண்டும் மாசுபாடு அதிகரித்து வருவதாக சமூகத் தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நதியின் மோசமான நிலை குறித்து அவர் தமது கவலையைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தாமான் ரும்புன் பஹாகியாவிற்கும், ரூமா அவாம் பந்தாய் பெரிங்கிற்கும் இடையில் நதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் குப்பைகள் நிறைந்த நிலையில் தண்ணீர் அசுத்தமாகவும், தேங்கி நிற்பதாகவும் பெங்காலான் பத்து சமூகச் சேவை மையத்தின் தலைவர் காஸ்ஸெல் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்த நதி வீற்றிருக்கும் பகுதியில் ஆரோக்கியமான, தூய்மையான சூற்றுச்சூழல் இருப்பதற்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை, அந்த நதி மடிந்து விட்டதைத் போல் உணர முடிகிறது என்று காஸ்ஸெல் கிருஷ்ணன் கூறினார்.
நதியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டை அகற்றவும், நதியைச் சுத்தமாக வைத்திருக்கவும் மலாக்கா மாநில அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.