காரின் பூத்துக்குள் மறைந்திருந்த இரண்டு மலேசியர்கள் கைது

சிங்கப்பூர், ஜூலை.08-

காரின் பூத்துக்குள் மறைந்து கொண்டு, சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற இரு மலேசியர்களை சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த ஜுலை 5 ஆம் தேதி சனிக்கிழமை சிங்கப்பூர் ஊட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடி மையத்தில் நடந்ததாக சிங்கப்பூர் ஐசிஏ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

20 வயது மதிக்கத்தக்க இரு மலேசியர்களும், அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய முயற்சி செய்ததற்கு உடந்தையாக இருந்த கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.

இந்த மூவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று ஐசிஏ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS