பேச்சு சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

சுபாங் ஜெயா, ஜூலை.08-

பிகேஆர் உறுப்பினர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திர உரிமையைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் கேட்டுக் கொண்டார்.

பிகேஆர் உறுப்பினர்கள் அனைவரும் கருத்து சொல்வதற்கு உரிமைப் பெற்றுள்ளனர். ஆனால், அதனைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான ரமணன் குறிப்பிட்டார்.

எந்தவொரு கருத்து சுதந்திரமாக இருந்தாலும் அதனை நல்ல முறையில் மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அவதூறு தன்மையில் அள்ளித் தெளிப்பதாக இருக்கக்கூடாது என்று ரமணன் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS