அகதிகளைப் பதிவு செய்வதற்கு உள்துறை அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஜூலை.08-

நாட்டில் உள்ள அகதிகள் பிரச்னையைக் கையாளும் முயற்சியாக அவர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்குவதற்கு உள்துறை அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அகதிகளைப் பதிவு செய்யும் முறையை அகதிகளுக்கான ஐநா. தூதரகம் கொண்டுள்ளது என்ற போதிலும் அகதிகள் பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சை, மலேசிய பாதுகாப்பு மன்றம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் இந்தப் பதிவு நடவடிக்கைக்கான வெண்டர்களை நியமிப்பது தொடர்பில் உள்துறை அமைச்சு பரிசீலனை செய்து வருவதாக சைஃபுடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS