ஜார்ஜ்டவுன், ஜூலை.08-
தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படுவதை ஒத்தி வைக்குமாறு பினாங்கு மாநில அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது. பயனீட்டாளர்களின் சுமையைக் குறைப்பதற்கு குறைந்தது 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்குமாறு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பினாங்கு மாநில அரசாங்கத்தின் இந்தப் பரிந்துரை, தேசிய தண்ணீர் சேவை ஆணையமான ஸ்பானிடம் முன் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காகப் பினாங்கு மாநில அரசு காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் தண்ணீர் கட்டண உயர்வு ஒத்தி வைக்கப்படுவது மூலம் பினாங்கு தண்ணீர் விநியோக வாரியம் 40 மில்லியன் செலவினத்தை ஏற்க வேண்டியுள்ளது என்று பினாங்கில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சோவ் கோன் யோவ் இதனைத் தெரிவித்தார்.