காஜாங், ஜூலை.09-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்துள்ளது. அந்த காரில் இருந்ததாக நம்பப்படும் ஒரு தம்பதியர், காரிலிருந்து தப்பித்து, தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் உலு லங்காட், சுங்கை லோங், ஜாலான் குவாரியில் உள்ள ஓர் ஆற்றில் நிகழ்ந்தது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து போலீசாருக்குத் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆற்றில் மூழ்கும் தருவாயில் உள்ள அந்தக் காரை, தீயணைப்பு, மீட்புப்ப படையினரின் உதவியுடன் சோதனையிட்ட போது, காரில் யாரும் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது.
அதே வேளையில், அந்தக் காரைக் கணவனும், மனைவியும் வாடகைக்குப் பெற்றுச் சென்றதாக காரின் உரிமையாளர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதில் உயிருடற் சேதம் நிகழவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.