கோலாலம்பூர், ஜூலை.09-
மின்சார ஆற்றலைப் பயன்படுத்தும் அளவுக்கோலான கிலோவாட் அவர் அல்லது கிலோவாட் மணி பயன்பாட்டு வரைபடங்களை, ஜுலை மாத மைடிஎன்பி செயலியில் காட்சிப்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பச் சிக்கலை டிஎன்பி எனப்படும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது.
தினசரி மற்றும் மாதாந்திர பயன்பாட்டு வரைபடங்களின் காட்சிப்படுத்தும் முறை, தற்போது முழுமையாகச் செயல்பட்டு வருவதாக டிஎன்பி அறிவித்துள்ளது.
ஒரு சீரான பயன்பாட்டு அனுபவத்தை உறுதிச் செய்வதற்காக கணினி செயல்திறனை டிஎன்பி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தச் சிக்கல் வாடிக்கையாளர்களின் உண்மையான மீட்டர் அளவீடுகள் அல்லது ஜூலை மாதத்திற்கான இறுதி பில்களைப் பாதிக்காது என்பதை டிஎன்பி மீண்டும் உறுதி அளித்துள்ளது.
இந்த மேம்பாட்டு செயல்முறையில் ஏற்பட்ட எந்தவொரு குழப்பத்திற்கும் பயனீட்டாளர்களிடம் டிஎன்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.