சிங்கப்பூர், ஜூலை.09-
மாணவனுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாகத் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவர், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
13 வயது சிறுவனுடன் அந்த பெண் ஆசிரியர் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக அவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சம்பந்தபட்ட மாணவன், அந்த பெண் ஆசிரியரின் வகுப்பறையைச் சேர்ந்தவனா? என்பது தொடர்பான துல்லியமான விவரங்களை சிங்கப்பூர் நீதிமன்றம் பொதுவில் வெளியிடவில்லை.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியரினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவனின் விவரங்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
34 வயதுடைய அந்த பெண் ஆசிரியர், கடந்த 2019 ஆம் ஆண்டில் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடத்தில் காருக்குள் அந்த மாணவனுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு மீதான விசாரணையை சிங்கப்பூர் நீதிமன்றம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.