கேரித் தீவு, கல்வி தொழில்நுட்ப மையமாக உருமாற்றம் காணவிருக்கிறது

ஷா ஆலாம், ஜூலை.09-

கிள்ளான் அருகில் உள்ள கேரித் தீவு அனைத்துலக தரத்திலான கல்வி தொழில்நுட்ப மையமாகவும், உணவுத் தயாரிப்புத் தளமாகவும் உருமாற்றம் காணவிருக்கிறது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தை விவேகப் பொருளாதார மையமாக உருமாற்றம் காணும் முயற்சிகளில் ஒரு பகுதியாக தோட்டத் தொழில்துறையைக் கொண்டுள்ள கேரித் தீவுக்கு புதிய அந்தஸ்து வழங்கப்படவிருப்பதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட், டிஎஸ் கத்ரி பெர்ஹாட், ஐஜேஎம் கார்பரேஷன் பெர்ஹாட் மற்றும் யாயாசான் சிலாங்கூர் ஆகிய நிறுவனங்கள், கேரித் தீவை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS