பூச்சோங், ஜூலை.09-
இம்மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள விற்பனை சேவை வரியான எஸ்எஸ்டி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே அவ்வகை வரி விதிக்கப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் ஷம்சூல் நிஸாம் காலில் விளக்கமளித்துள்ளார்.
இதன் தொடர்பில் அனைத்து வர்த்தகத் தளங்களிலும் திடீர் சோதனையைத் தங்கள் தரப்பினர் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த எஸ்எஸ்டி வரி விதிப்பைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து வகையான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு, மோசடி புரிவதைத் தடுக்கவே இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.