கோலாலம்பூர், ஜூலை.09-
அம்பாங்கில் கொலை செய்யப்பட்ட இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர், தொடர்ச்சியாகச் சித்ரவதைச் செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 73 வயது நபரும், அவரின் 36 வயது மகனும் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடன் விவகாரம் தொடர்பில் தந்தையும், மகனும் அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநரை சித்ரவதைச் செய்து கொன்று இருக்கின்றனர். தொடக்கத்தில் அந்த நபரின் இறப்பு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்ட போதிலும், அதில் குற்றத்தன்மை இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.