மதுபானம் ஏலம் விடப்பட்ட சம்பவம்: அமானா வருத்தம்

பொந்தியான், ஜூலை.09-

ஜோகூர், பொந்தியான், பெக்கான் நெனாஸில் ஒரு தொடக்கப் பள்ளியின் வருடாந்திர நிதி திரட்டும் நிகழ்வில் மதுபானத்தைப் போட்டிப் போட்டுக் கொண்டு ஏலம் எடுப்பதில் நிகழ்ந்த கைகலப்பில் 18 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமானா கட்சி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

மதுபானம் தொடர்புடைய பள்ளி வருடாந்திர நிகழ்வுகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கக் கல்வி அமைச்சு முறையான வழிகாட்டலை வெளியிட வேண்டும் என்று அமானா கட்சியின் கல்விப் பிரிவுத் தலைவர் அஸ்லி யுசோஃப் கேட்டுக் கொண்டார்.

பள்ளிக்கு நிதி திரட்டும் நிகழ்வாக இது இருந்த போதிலும் கல்வி தொடர்புடைய விவகாரங்களில் மதுபானம் சம்பந்தப்படுத்தக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS