புத்ராஜெயா, ஜூலை.09-
கடமையின் போது மிக ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதாக அடையாளம் காணப்பட்ட சாலை போக்குவரத்து இலாகாவின் ஜேபிஜே அமலாக்க அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேரா, சிம்பாங் பூலாயில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பில் அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
முந்தக்கூடாத சாலை வளைவில் இரண்டைக் கோடுகளையும் மீறி அந்த அதிகாரி, ஜேபிஜே வாகனத்தைச் செலுத்தியது தொடர்பில் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டதுடன் அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.