புத்ராஜெயா, ஜூலை.09-
13 ஆவது மலேசியத் திட்டம் மீதான ஆய்வு தற்போது இறுதிக் கட்டடத்தில் இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அந்த பிரதான தேசியத் திட்டத்தின் திட்டமிடல் பணிகள் தற்போது கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அந்தத் திட்டம் மிக கவனமாக ஆராயப்படும் என்று அவர் விளக்கினார்.
தவிர வழக்கம் போல் 13 ஆவது மலேசியத் திட்டத்தில் புறநகர் மேம்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்குத் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்று புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.