துன் மகாதீருக்கு பிரதமர் அன்வார், வான் அஸிஸா வாழ்த்து

கோலாலம்பூர், ஜூலை.10-

இன்று ஜுலை 10 ஆம் தேதி தமது 100 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

டாக்டர் மகாதீர் தனது அன்றாட வாழ்வில் நல்வாழ்வு, மன அமைதி மற்றும் உடல் வலிமையுடன் தொடர்ந்து ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று தாங்கள் இறைவனிடம் இறைஞ்சுவதாக பிரதமர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தனர்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முடிவில்லாத தொண்டு ஆகியவை வயதானாலும், இன்னும் அதிக நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு தேசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்பதற்கு துன் மகாதீர் ஒரு முன்னுதாரணமாகும் என்று அவர்கள் தங்கள் முகநூலில் புகழாரம் சூட்டினர்.

மலேசியாவின் மிக நீண்ட காலம் பிரதமர் மற்றும் நாட்டிற்கு இரண்டு முறை பிரதமர் பதவியை ஏற்றவரான துன் மகாதீர், கடந்த 1925 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் தேதி கெடா, அலோர் ஸ்டாரின் பிறந்தார்.

WATCH OUR LATEST NEWS