பாரிஸ், ஜூலை.10-
கடந்த 2014 ஆம் ஆண்டு 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டு இருந்த மலேசிய ஏர்லைன்சுக்குச் சொந்தமான எம்எச் விமானம், ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அனைவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு ரஷியாவே பொறுப்பேற்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் வரலாற்றுப்பூர்வமானத் தீர்ப்பை, வழங்கியுள்ளது.
உக்ரெயின் வான் போக்குவரத்துப் பாதையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்திற்கு முழு பொறுப்புதாரி ரஷியாவே என்று பிரான்ஸ், ஸ்ட்ராஸ்பெர்க்கைத் தளமாகக் கொண்ட அந்த மனித உரிமை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தச் சம்பவம் உக்ரேயினில் நிகழ்ந்தாலும், அந்தப் பகுதி முழுக்க முழுக்க ரஷியா ஆதரவு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அந்த உலக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.