பெட்டாலிங் ஜெயா, ஜூலை.10-
33 வயது திட்டமிடல் நிர்வாகி ஒருவர், கடந்த ஜுலை 6 ஆம் தேதி டோட்டாவில் 6 கோடு 55 பவர் ஜேக்பாட் லாட்டரி குலுக்களில் பிரதான பரிசான 14.6 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.
தம்முடைய இந்த அதிர்ஷ்டத்திற்கு தனது காதலியே காரணமாகும் என்று அந்த நிர்வாகி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தம்முடைய காதலியின் மைகாட் அட்டையின் எண்களைப் பயன்படுத்தியே டோட்டோவில் 6 கோடு 55 பவர் ஜேக்பாட்டில் அந்த அதிர்ஷ்டத்திற்குரிய எண்ணை வாங்கியதாகவும், இன்று தம்மை ஒரு லட்சாதிபதியாக உயர்த்தியுள்ளது என்றும் அந்த நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.
4,8,11,18,20 மற்றும் 29 ஆகியவையே அந்த அதிர்ஷ்ட எண்ணாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.