தாவாவ், ஜூலை.10-
மாணவி ஒருவரின் முன்னிலையில் ஆபாசச் சேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தாவாவ், மெரோதாய் என்ற பகுதியில் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவியிடம் 30 வயது மதிக்க நபர், ஆபாச சேட்டைப் புரிந்ததாகக் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து அந்த நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் ஹுசேன் தெரிவித்தார்.
அந்த நபர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.