ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. ரூ.800 கோடி செலவில் பான் இந்தியா அளவில் இப்படத்தை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கருப்பொருளில் உருவாகியுள்ள கதைக் களமாகும். ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இப்படத்திற்காக ஓர் உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.