பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் இணைத்து ஒரே படம்

2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி. இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் சென்றது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதையொட்டி ‘பாகுபலி’ 2 பாகங்களையும் ஒரே படமாக ‘பாகுபலி – தெ எபிக்’ என்ற பெயரில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மீண்டும் வெளியீடு செய்யப்படும் என அப்படங்களின் இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

 

WATCH OUR LATEST NEWS