கையூட்டுப் பெற்ற போலீஸ் அதிகாரி கைது

அலோர் ஸ்டார், ஜூலை.10-

தடுப்புக் கைதி ஒருவரைப் போலீஸ் ஜாமீனிலிருந்து விடுவிப்பதற்கு 2 ஆயிரம் ரிங்கிட் கையூட்டாகக் கேட்டுப் பெற்றதாக கெடா மாநிலத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் அதிகாரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ் அதிகாரியை விசாரணைக்கு ஏதுவாக இன்று தொடங்கி ஜுலை 12 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.

அந்த அதிகாரி, போலீஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டு இருந்த போது நேற்று காலை 11 மணியளவில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்று அதன் வட்டாரங்கள் தெரிவித்தன.

WATCH OUR LATEST NEWS