தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்தது: 22 பேர் காயம்

கூலாய், ஜூலை.10-

தொழிற்சாலைப் பேருந்து ஒன்று , சாலையை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் அந்நிய நாட்டைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் காயமுற்றனர்.

இச்சம்பவம், இன்று ஜோகூர், கூலாய், செனாய் தொழிற்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்தது என்று கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.

காயமுற்றத் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS