கோலாலம்பூர், ஜூலை.10-
வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் – அமெரிக்கா உச்சநிலை மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரத்துவ அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ருபியோவுடன் பிரதமர் அன்வார் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியப் பின்னர் உபசரணை நாடு என்ற முறையில் மலேசியா ஏற்று நடத்தும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.