டொனால்டு டிரம்பின் மலேசிய வருகை சாத்தியமாகலாம்

கோலாலம்பூர், ஜூலை.11-

வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் – அமெரிக்கா உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை புரிவதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ருபியோ கோடி காட்டியுள்ளார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 58 ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட மார்கோ ருபியோ, அமெரிக்க அதிபரின் மலேசிய வருகை, பெரியளவில் சாத்தியமாகலாம் என்று குறிப்பிட்டார்.

ஆசியான் – அமெரிக்கா உச்சநிலை மாநாடு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரத்துவ அழைப்பை ஏற்று டொனால்டு டிரம்ப் வருகை புரியக்கூடும் என்று மார்கோ ருபியோ நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS