இரு லோரிகள் மோதிக் கொண்டதில் ரசாயனம் கசிந்தது

சபா பெர்ணம், ஜூலை.11-

ரசாயனம் ஏற்றி வந்த லோரி ஒன்று, மற்றொரு லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் சாலையில் பெரியளவில் ரசாயனக் கசிவு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் சிலாங்கூர், சபா பெர்ணம் சாலையில் நிகழ்ந்தது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் சாலையில் கசிந்த ரசாயனத்தை அகற்றும் பணியை தீயணைப்பு, மீட்புப் படையினர் முழு வீச்சில் தொடங்கினர் என்று சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான லோரிகளில் ஒன்று நிட்ரிக் அசிட் ரசாயனத்தை ஏற்றி வந்ததாக அவர் குறிப்பிட்டார். இவ்விபத்தில் 40 தோம்பு நிட்ரிக் அசிட், 24 தோம்பு கால்சியம் ஹைப்போகுளோரைட்டும் லோரியிலிருந்து கசிந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சாலையைத் தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை 2. 42 மணியளவில் நிறைவு பெற்றதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS