சுற்றுச்சூழல் அமைச்சின் பொறுப்பை ஏற்கிறார் ஜொஹாரி கானி

கோலாலம்பூர், ஜூலை.11-

தோட்டம் மற்றும் மூலத் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி கானி, அமைச்சரின்றி காலியாக இருக்கும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜொஹாரி கானியின் இந்த கூடுதல் பணி உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷாம்சூல் அஸ்ரி அபு பக்கார் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், செத்தியா வங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் நஸ்மி நிக் அஹ்மாட், தாம் வகித்து வந்த இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியிலிருந்து திடீரென்று விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அந்த அமைச்சுக்கு அமைச்சர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த அமைச்சின் பொறுப்புகளை ஜொஹாரி கானி கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS