பான்யுவாங்கி, ஜூலை.11-
இந்தோனேசியா, பாலி தீவில் கடந்த வாரம் பயணிகள் ஃபெர்ரி கவிழ்ந்த சம்பவத்தில் நீரில் மூழ்கி மாண்டவர்களில் ஒரு மலேசியரும் அடங்குவர் என்று இந்தோனேசியா உறுதிப்படுத்தியது.
58 வயதான ஃபௌஸி அவாங் என்ற மலேசியர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததை இந்தோனேசிய போலீஸ் துறை உறுதிப்படுத்தியது. தற்போது அந்த நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக இந்தோனேசியாவின் அந்தாரா செய்தி நிறுவனம் கூறுகிறது.