ரவூப், ஜூலை.11-
கடமையில் இருந்த பாதுகாவலர் ஒருவரின் கழுத்தில் பாராங்கை வைத்து மிரட்டியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பகாங், ரவூப், ஹூத்தான் சிம்பான் ஸ்ராஸ் என்ற இடத்தில் கொம்பார்ட்மெண்ட் 214 கட்டடத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த 29 வயது நபர் பாராங் முனையில் அச்சுறுத்தப்பட்டதாகக் கிடைக்கப் பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த சந்தேக நபர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.