நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழிலும் மிக பிரபலமானவர். அண்மையில் தனுஷுடன் அவர் குபேரா படத்தில் நடித்து இருந்தார். அப்படம் தெலுங்கில் மட்டும் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் தமிழில் வசூல் பெரிதாக வரவில்லை.
அடுத்து நாகர்ஜுனா ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து இருக்கிறார். அந்தப் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் நாகார்ஜூனா அடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழில் வெற்றி பெற்ற அயோத்தி படத்தைத்தான் அவர் தெலுங்கில் ரீமேக் செய்கிறார். இது அவரது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.