நியூ ஜெர்சி, ஜூலை.11-
கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் செல்சியும் பிஎஸ்ஜியும் களம் காண்கின்றன. முன்னதாக பிஎஸ்ஜி 4க்கு 0 என்ற கோல் கணக்கில் ரியால் மாட்ரிட்டைத் தோற்கடித்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. அதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி, ரியாலைத் திணறடிக்கச் செய்து நான்கு கோல்களைப் புகுத்தியது. இரு கோல்களை பெஃபியன் ருயிஸ் அடித்தார். மேலும் இரு கோல்களை ஓஸ்மேன் டெம்பிலியும் கொன்சாலோ ரமோஸும் போட்டனர்.
இதனிடையே செல்சிக்கும் பிஎஸ்ஜிக்கும் இடையிலான இறுதியாட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது.