மலாக்காவின் புதிய முதலமைச்சராக மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் அப்துல் ரவுப் யூசோ நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலிக்குப் பதிலாக அப்துல் ராவுப், மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் பதவி தொடர்பில் எழுந்து வந்த பல்வேறு ஆருடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவரான ரவுப் யூசோ முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மலாக்கா ஆளுநர் துன் முகமட் அலி முகமட் ருஸ்தாம் முன்னிலையில் ரவுப் யூசோ முதலமைச்சராக பதவியேற்கவிருப்பதாக முதலமைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.