பாஸ் கட்சியின் பெசுட் எம்.பி., சே ஸுல்கிப்லி ஜுசோ மக்களவைத் துணை சபாநாயக்கர் ரம்லி நூர், மூன்று முறை ஆணை பிறப்பித்தும் அதைப் பொருட்படுத்தாததால் மக்களவையை விட்டு இன்று வெளியேற்றப்பட்டார்.
ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்கள் குறித்து கோத்தாபாரு எம்.பி. தக்கியுடின் ஹசான் கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு பேச முனைந்த சே ஸுல்கிப்லி ஜுசோவை அமரும்படி பணித்தும் அவர் தொடர்ந்து இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார்.
இதனால் துணை சபாநாயக்கர் மூன்று முறை பிறப்பித்த உத்தரவையும் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருந்ததால் அவர் மக்களவையை விட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கான தடை 3 நாட்களுக்கு நீடிக்கும்.