செயலிகள் அல்லது டிஜிட்டல் முறைகள் மூலம் மோட்டார், வாகனப் பதிவை ரத்து செய்யவதற்கு மலேசிய போக்குவரத்து அமைச்சு ஒரு புதிய அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே அலுவலகங்களுக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே வாகனப் பதிவுகளை ரத்து செய்து மக்களுக்கு உதவுவதே இந்த அமைப்பின் நோக்கம் என்று அதன் துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார்.
அதே வேளையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், சாலை பாதுகாப்பை அதிகரிக்கவும், நீண்ட காலமாக இருந்து வரும் பழைய வாகனங்களால் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், நாட்டின் கார் பூட்டும் தொழில் துறைக்கு மேலும் அதிகமான வாகனங்களை தயாரித்து வெளியிடும் வாய்ப்பு பெருகவும் வழி ஏற்படும் என்று ஹஸ்பி ஹபிபொல்லா இன்று மக்களவையில் விளக்கினார்.